Skip to main content
Thumbnail for Poliga poliga

Poliga poliga

Rākavan̲, Pā2021
Books
A bright light appeared there as if the air and smoke were mixed. Pancha Buddhas crowded into it. The Devas and the Sabta Rishis gathered. The sound of a tremendous fury, the like of which no one had heard before, began to spread like a pitch and spread everywhere. Unusually, the sound had a scent. The ears felt it. It smelled like basil. It moved. There was no movement. I could feel the sound coming from the forehead in the middle of the bright light that appeared. Suddenly that flood of light turned into a huge dragon. Its vast expanse expands on both sides like a thousand years. Even within those thousand heads, tongues stuck out at the same time. 'Hmm, start!' Sounds of rage formed into words. Adisashan, which is the seat of Paraman in the ocean of milk with a thousand heads and a huge body and sharp eyes. He appeared as Lakshmana in Ramavatara. He took birth as Balarama in Krishna avatara. Appearing as a tamarind tree when Lord decided to take birth as Nammalvar at the beginning of Kali, he cast a golden shadow. 'Polika Polika!' When the hint for the next incarnation came out from the mouth of Nammalwar, he came and rose as Ramanuja saying 'Here I am gone'.காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன. 'ம், ஆரம்பியுங்கள்!' சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன. ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளிய மரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். 'பொலிக பொலிக!' என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, 'இதோ புறப்பட்டுவிட்டேன்' என்று ராமானுஜராக வந்து உதித்தார்...
Main title:
Poliga poliga / Pa Raghavan.
Author:
Imprint:
Chennai : Zero Degree, 2021
Collation:
460 pages ; 22 cm.
Notes:
Tamil text
ISBN:
9789390884472 (pbk)
Language:
Tamil
BRN:
2551125
0